நற்செய்தி கூறுவோம்- Narseithi kooruvom
நற்செய்தி கூறுவோம் நம் மீட்பர் பிறந்தாரே
நன்றியோடு பாடுவோம் மகிழ்வின் நாளிதுவே
வந்ததே வெளிச்சம் வந்ததே
வந்ததே வெளிச்சம் வந்ததே
அகன்றதே இருளும் அகன்றதே
அமலன் பிறந்ததால்
அமைதி வந்ததே
அதிசயமானவராகவே
அவதரித்தாரே புவியினில்
மந்தையர் கேட்டனரே
மகிழ்வின் செய்தியையே
அச்சம் எங்கும் நீங்கவே
அகிலம் மீட்க வந்தாரே