வானங்கள் தேவனின் -Vaanangal Devanin
வானங்கள் தேவனின்
மகிமையை வெளிப்படுத்தும்
ஆகாய விரிவவரின்
கிரியை அரிவிக்கும்
அலைக்கடல் உள்ளாழ்ந்து
அலைகின்ற யாவும்
அகிலமெல்லாம் நிறைந்த
அளவில்லா உயிர்களும்
அன்புள்ள தந்தையே நின்
அரும் புகழ் பாடுமன்றோ…வானங்கள்
மன்னுயிர்க்காக உன்தன்
மகிமை துறந்தீரே
மானிடனாய் வந்தீரே
மறையவனே எங்கள் இறையவனே
மனுவேலனே மிக்க
மாட்சிமை கொண்டவனே
மன்னவனே உமைப்போல்
வாழ வாழ்த்தி அருள்வாயே.. வானங்கள்