Bayapadathey Nee Kalangidathey – பயப்படாதே நீ கலங்கிடாதே
Bayapadathey Nee Kalangidathey – பயப்படாதே நீ கலங்கிடாதே
பயப்படாதே நீ கலங்கிடாதே
திகைத்திடாதே கர்த்தர் உன்னோடு
கர்ப்பத்தில் உன்னைத் தெரிந்து கொண்டார்
பெயர்சொல்லி உன்னை அழைத்து விட்டார்
உள்ளங்கையில் உன்னை வரைந்து கொண்டார்
தமக்கு என்றும் சொந்தமாக்கிக் கொண்டார்
ஆறுகளை நீ கடந்திடுவாய்
குன்றுகளை நீ தகர்த்திடுவாய்
அவைகள் உன்மேல் என்றும் புரள்வதில்லை
மலைகள் என்றும் உன்னை அசைப்பதில்லை
சிங்கங்களின் வாயை கிழித்திடுவாய்
சர்ப்பங்களை நீயும் மிதித்திடுவாய்
தீங்கு ஒன்றும் உன்னை அணுகாது
சேதம் உன்னில் ஒன்றும் நேராது