கடந்து வந்த பாதையை – Kadanthu Vantha Paathaiyai
கடந்து வந்த பாதையை – Kadanthu Vantha Paathaiyai
கடந்து வந்த பாதையை நான்
திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரின் வாழ்க்கையை நான்
நினைத்து பார்த்தேன்
கர்த்தாவே உமதன்பில்லை என்றால்
நான் கண்ணீரில் மூழ்கி மடிந்திருப்பேன்
1.
உளையான சேற்றினிலே
வீழ்ந்த என்னையுமே
கரம்பிடித்து தூக்கிவிட்டீர்
ஆதரவின்றி தவித்திட்ட என்னை
அன்னையை போல அரவனைத்தீரே
இயேசுவே நீரின்றி வாழ்வில்லையே
2.
நான் நம்பியோரெல்லாம்
என்னை கைவிட்ட போதும்
நான் இருப்பேன் என்று சொல்லி
கரம் பிடித்தீரே வழிகாட்டினீரே
கண்மணிபோல காத்து வந்தீரே
இயேசுவே நீரே என் சொந்தமே
3.
செய்யாத குற்றங்களை
என் மேல் சுமத்திடவே
இயேசுவே உம்மை நினைத்தழுதேன்
பாவமில்லாத பரிசுத்தரும்மை
பாவிகள் சேர்ந்து கொலை செய்தனரே
இயேசுவே உம்மையன்றி தெய்வமில்லை