Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா
Nazareyane En Yesaiah – நசரேயனே என் இயேசையா
நசரேயனே என் இயேசையா
என்றும் உம் நாமம் பாடி
தேவாதி தேவன் நீரே என்று
குரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்-2
உமக்கே ஸ்தோத்திரம்-6-நசரேயனே
1.வானதி வானங்களை
உம் கரத்தினால் அளந்தீரலோ-2
வெறுமையிலே இந்த பூலோகத்தை-2
நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா-2
உமக்கே ஸ்தோத்திரம்-6
2.ஆகாய சமுத்திரத்தின்
நீர் எல்லையை குறித்தீரலோ-2
தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும்-2
புரளாமல் காத்தீரே என் இயேசையா-2
உமக்கே ஸ்தோத்திரம்-6
3.சீயோனின் சிகரமது
உம் சிங்காசனமானது-2
சீயோனிலே உம்மை கண்டிடவே-2
ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா-2
உமக்கே ஸ்தோத்திரம்-6