Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை
Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை
இயேசு கிறிஸ்துவின் வாசனை என்னில் வீசிட
இயேசு கிறிஸ்துவின் சாயலை அணிய வேண்டுமே
கிறிஸ்துவின் வாசனை சுகந்த ஜீவ வாசனை
கிறஸ்துவை அறியும் அறிவில் பெருகவே
1. அன்பின் வாசனை எவர்க்கும் நான் பகிர்ந்திடவே
ஐக்கியத்தின் வாசனை யாவரும் பெற்றிட
இரட்சிப்பின் வாசனை என்றும் என்னில் மலர்ந்திட
மன்னிப்பின் வாசனை யாவர்க்கும் நானும் காண்பிக்க
2. ஈகையின் வாசனை நாளெல்லாம் நானும் செய்திட
நன்றியின் வாசனை என்றும் நானும் சொல்லிட
மன்றாட்டின் வாசனை எனக்குள் தினமும் தூபமாய்
என்றும் பற்றி எரிந்திட உதவி செய்யுமே
3. கர்த்தருக்குப் பயந்திடும் வாசனை எனக்குள்
என்றும் என்னில் நிலைத்தருக்க பெலன் தாருமே
தினம் என் வாழ்வில் பரிசுத்த வாசனை வீசிட
பரலோகத்தை சுதந்தரிக்க வழிநடத்துமே