EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம்
EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம்
என் ஜீவ நாட்களெல்லாம்
என்றும் உம்மை சார்ந்திருப்பேன்
நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே
என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா
1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா – என்னை
கைவிடவில்லையையா
2. ஆதரித்தீர் அரவணைத்தீர்
உம் தோளில் என்னை சுமந்தீர்
3. காரிருள் சூழ்கையில்
ஒளியாக வந்தீரையா
4. கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர்
எண்ணில்லாத நன்மைகள் செய்தீர்
5. இதுவரையில் நடத்திவந்தீர்
இனிமேலும் நடத்திடுவீர்
6. சோதனையோ வேதனையோ
இயேசையா உம்மை நம்புவேன்
7. என் மீட்பரே என் இயேசுவே
உயிரோடு இருப்பவரே