உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal

Deal Score0
Deal Score0

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal

உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2

அன்பு தெய்வமே நேச தெய்வமே-2
இயேசையா என் இயேசையா-உம்மை பாடாம

எளிமையானவன் சிறுமையானவன்
தண்ணீரை தேடி தாகத்தாலே
நாவறண்டு போனேனே
என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2
(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2
– உம்மை பாடாமல்

1.மனுஷர் பாக்கிறவண்ணமாய்
நீர் பார்ப்பதே இல்லை
பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை
யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை
புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே
பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2

உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா
உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா-2
– உம்மை பாடாமல்

2.ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா
எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா
சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா
திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே
உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர்-2

ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே
தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே-2
– உம்மை பாடாமல்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo