Vaakkuthantha Desam Song Lyrics
Vaakkuthantha Desam Song Lyrics
Vaakkuthantha Desam Song Lyrics in Tamil and English Sung By. Kingsly Sivapragasam, Joel Thomasraj.
Vaakkuthantha Desam Christian Song Lyrics in Tamil
மகிழ்ந்து கொண்டாடுவோம் மகிபனின் தேசத்தில்
அகமகிழ்ந்திடுவோம் கர்த்தரின் சமூகத்தில்
மகிமையின்மேல் மகிமையடைத்து மறுரூபமாகுவோம் (2)
ஆனந்தம் பேரின்பம் நேசரின் சமூகத்தில்
ஆர்ப்பரிப்போம் நாம் ஆராதிப்போம் அன்பர் இயேசுவின் பாதத்தில் (2)
1. அடிமையாய் வாழ்ந்த வருஷங்கள் இனிமேல் நமக்குயில்லை
இதுவரை கண்ட எகிப்தியரை இனிமேல் காண்பதில்லை (2)
பாலும் தேனும் ஓடும் தேசம், பஞ்சம் அறியா பரம தேசம்
வாக்கு தத்த தேசம் , கர்த்தர் வாக்குரைத்த தேசம் – மகிழ்ந்து
2. வாஞ்சிக்கும் தேசத்தை அடையும்வரை சோர்த்து போவதில்லை
நம் இலக்கை அடைந்திடும் காலமோ அதி தூரத்தில் நமக்கு இல்லை (2)
உயர்வு, தாழ்வு இல்லா தேசம், துன்பம் அறியா பரம தேசம்
வாக்கு தத்த தேசம் நங்கள் வாழப்போகும் தேசம் – மகிழ்ந்து
3. குறுகிய கால இன்னல்கள் நமக்கு உரியதில்லை
சஞ்சலம், பசித்தாகம், வருத்தங்களும் அங்கே நமக்கு இல்லை (2)
மேகமீதில் கர்த்தர் வருவார், நம்மை அவருடன் அழைத்து செல்வார்
வாக்கு தத்த தேசம், அதுவே நம் சீயோன் தேசம் – மகிழ்ந்து
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs