வசந்தமாய் விடியல் – Vasanthamai Vidiyal
வசந்தமாய் விடியல் – Vasanthamai Vidiyal
வசந்தமாய் விடியல்
புலர்ந்திடும் பொழுது
வாருங்கள் இறைகுலமே
நிறை வாஞ்சை மனதுடன்
விண்ணக தேவனை
வழிபட வாருங்களே
இறை அருள் தரும் பலி இது
ஆதவன் ஒளி இது
அர்ப்பணமாகிட வாருங்களே
திருப்பலியினில் கலந்திட கூடுங்களே
வரண்ட மணலாய் வாடி தவித்திடும்
வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலி இது
மாபெரும் தவமாய் மானுட நேசம்
மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலி இது
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே
எங்கும் நிறைந்த தந்தை வழி செல்ல
வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் வழி இது
ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில்
தேற்றுதல் தந்திடும் தெய்வீக பலி இது
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே