உம் பாதத்தில் என்னை – Um Paathathil Ennai
உம் பாதத்தில் என்னை – Um Paathathil Ennai
SONG LYRICS:
உம் பாதத்தில் என்னை படைக்கிறேன்
என்னை ஏற்றுக்கொள்ளும்
என் இயேசுவே (2)
உம் உள்ளங்கையில் என்னை வரைந்து கொள்ளும்
உமக்காய் வாழ ஏங்குகிறேன்
உமக்காய் வாழ வாஞ்சிக்கிறேன் (2)
– 1 –
துக்கமோ துயரமோ பசியோ பட்டினியோ (2)
கிறிஸ்துவின் அன்பில் இருந்து எதுவும் பிரிக்காது (2)
உம் சமூகத்தில் என்னை தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கிறேன்(2)
– (உம் பாதத்தில்)
– 2 –
வியாதியோ வறுமையோ கண்ணீரோ கவலையோ (2)
உனக்காய் ஜீவன் தந்தவர்
நம் இயேசு (2)
முடிவு வரை உன்னை நடத்திடுவார்
எந்த சேதமும் இன்றி காத்திடுவார்(2)
– (உம் பாதத்தில்)
உம் பாதத்தில் என்னை படைத்து விட்டேன்
என்னை ஏற்றுக் கொண்டீர் என் இயேசுவே (2)
உம் உள்ளங்கையில் என்னை வரைந்து விட்டீர்
உமக்காய் வாழ்வேன் இறுதிவரை என்னில் ஜீவன் பிரியும் வரை