அம்மா அமுதெனும் – Amma Amuthennum Lyrics
அம்மா அமுதெனும் – Amma Amuthennum Lyrics
அம்மா அமுதெனும் இனியவளே
அமலியாய் உதித்தவளே
அகமே மகிழ்வாய் மரியே அம்மா
தாயெனும் போதினிலே – மனம்
தானுனைத் தேடுதம்மா
ஈன்ற தாயும் போற்றும் உந்தன்
பாதம் பணிந்திடுவேன் அம்மா
ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் ஏழு தூண்களுமாய்
பலி பீடமுமாய் அலங்கரித்தாயே
ஞானம் நிறை கன்னிகையே
கலைமொழியால் உனைத் துதித்திடல் நாளும் கவலைகள் நீங்குமம்மா
பல வகைப் பாகும் தெளிவுறு தேனும் தெவிட்டா உணவாமே
மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே
மாதரசியே மன ஒளி தாராய் மாசு அகலச் செய்வாய்
கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே
துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே
காத்திடுவாய்த் தாயே
வானோர் தம் அரசே ! தாயே எம்
மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
எக் காலத்துமே தற் காரும்.
மாதாவே ! துணை நீரே உம்மை
வாழ்த்திப் போற்ற வரந்தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா !
ஏற்றன்பாக எமைப் பாரும்
அன்னைக்குக் கரம் குவிப்போம்
அவள் அன்பைப் பாடிடுவோம்
உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள்தாருமம்மா
அமல உற்பவியே – Madha Mashup – Immaculate Conception Church Chromepet