
மாசற்ற தெய்வ நாமத்தை – Masattra Deiva Naamaththai Lyrics
மாசற்ற தெய்வ நாமத்தை – Masattra Deiva Naamaththai Lyrics
1.மாசற்ற தெய்வ நாமத்தை
துதி, என் நெஞ்சமே;
இரக்கம் செய்த கர்த்தரை
துதி, என் உள்ளமே;
2.உன் பாதங்கள் யாவையும்
நிவிர்த்தி செய்கிறார்;
உன் ரோகங்கள் அனைத்தையும்
பரிகரிக்கிறார்.
3.நீ மாண்டுபோகும் பொழுது
உன் ஜீவனை மீட்பார்;
நிறைந்த அன்பால் உனக்கு
கிரீடம் சூட்டுவார்.
4.நன்மைகளால் உன் மனதை
திருப்தியாக்கினார்;
அன்பாய் உன் ஆயுள் காலத்தை
நீடிக்கப்பண்ணினார்.
5.எந்நாளும் இந்த நன்மையை,
என் ஆத்துமாவே, நீ
மறந்திடாமல் கர்த்தரை
வணக்கமாய்த் துதி.
Masattra Deiva Naamaththai Lyrics in English
1.Masattra Deiva Naamaththai
Thuthi En Nenjamae
Erakkam Seitha Karththarai
Thuthi En Ullamae
2.Un Paathangal Yaavaiyum
Nivirththi Seikiraar
Un Rogankal Anaiththaiyum
Parikarikkiraar
3.Nee Maandu Pogum Poluthu
Un Jeevanai Meetpaar
Niraintha Anbaal Unakku
Kireedam Soottuvaar
4.Nanmaikalaal Un manathai
rupthiyaakkinaar
Anbaai Un Aayul Kaalaththai
Needikka Panninaar
5.Ennaalum Intha Nanamaiyai
En Aaththumavae Nee
Maranthidamal Karththarai
Vanakkamaai Thuthi