தேவனே நீர் என்னுடைய தேவன் – Dhevaney Neer Ennudaiya Dhevan
தேவனே நீர் என்னுடைய தேவன்
அதிகாலமே உம்மை தேடுகிறேன்
வரண்டதும் விடாய்த்ததும்
தண்ணீரற்றதுமான நிலத்தினிலே
என் ஆத்துமா உம் மேலே
தாகமாய் உள்ளதே
ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை நல்லதே
என் நாவு உம்மையே
எந்நாளும் துதிக்குமே
நான் உறங்கும் போதும்
உம்மையே நினைக்க செய்கிறீர்
இரவிலும் என்னை தியானம்
செய்ய வைக்கிறீர்