Aagayam Podhadhaya Lyrics – ஆகாயம் போதாதய்யா

Deal Score+1
Deal Score+1

Aagayam Podhadhaya Lyrics – ஆகாயம் போதாதய்யா

ஆகாயம் போதாதய்யா
உந்தன் அன்பின் நீளம் சொல்ல
ஆழ்கடல் பத்தாதய்யா
உந்தன் அன்பின் ஆழம் சொல்ல

என் மேல் நீர் கொண்ட அன்பு
அக்கினி போன்றதய்யா
நதி வந்து மோதினாலும்
தணித்திட முடியாதய்யா

உங்க அன்பு மட்டும் என்றும் மாறாதே
அந்த அன்பிற்காய் என் உள்ளம் ஏங்குதே!

ஒரு வார்த்தை
சொன்னால் போதும்
என் வாதை
எல்லாம் மாறும்
உம் பார்வை பட்டால் போதும்
என் பாதை அழகாய் மாறும்

இந்த வானம் பூமி யாவும் மாறுமே
உம் வார்த்தை மட்டும் என்றும் நிலைக்குமே

என் காலம்
உந்தன் கையில்
எனக்காக யாவும் செய்வீர்
என் இரும்புக்கதவை உடைத்து
என் இருளில்
ஒளியாய் வந்தீர்

இ்ந்த மலைகள் எல்லாம் வி்லகி போனாலும்
என் வாழ்நாளெல்லாம் கிருபை தொடருமே!

Aagayam Podhadhaya Lyrics in English

Aagayam Podhadhaya
Unthan Anbin Neelam Solla
Aalkadal Paththathaiya
Unthan Anbin Aalam Solla

En Mael Neer Konda Anbu
Akkini Pontrathaiya
Nathi Vanthu Mothinalum
Thanithida Mudiyathaiya

Unga Anbu Mattum Entrum Maarathae
Antha Anbirkkaai En Ullam Yeanguthae

Oru Vaarthai
Sonnal Pothum
En Vaathai
Ellaam Maarum
Um Paarvai Pattal Pothum
En Paathai Alagaai Maarum

Intha Vaanam Boomi Yaavum Maarumae
Um Vaarthai Mattum Entrum Nilaikumae

En Kaalam
Unthan Kaiyil
Enakkaaga Yaavum Seiveer
En Irumbukathavai Udaithu
En Irulil
Oliyaai Vantheer

Intha Malaigal Ellaam Vilagi Ponalum
En Vaazhnaal Ellaam Kirubai Thodaruamae

Aagayam Podhadhaya is a song that describes the 3 unchanging gifts from God

1.Unchanging Love
2.Unchanging word
3.Unchanging Grace

காண்கின்ற எல்லாம் மாறி போகும் இந்த உலகில் , என்றும் அழியாத மூன்று காரியத்தை தேவன் நமக்கு வாக்களித்திருக்கிறார்.

1.ஒழியாத தேவ அன்பு ( 1 கொரி 13:8)
2. அழியாத தேவ வார்த்தை (மாற்கு 13:31)
3. விலகாத தேவ கிருபை (ஏசாயா 54:10)

முதலில் என் கர்த்தருக்கு நன்றிகள் பகர்கிறேன்.. பல காலம் கழித்து ஒரு பரிபூரண பாடலை என்னைக் கேட்கச் செய்த கிருபைக்காய் ஆண்டவருக்கு ஆயிரங்கோடி நன்றிகள்.

அண்ணன் மதன் மோசஸ்.. வேதத்தில் வரும் மோசஸ் செங்கடலின் கரையில் நின்று தனது கோலை உயர்த்தி அந்த மஹா சமுத்திரத்தை இரண்டாய் பிளந்தான்..நீங்கள் ஒரு ஏரியின் கரையில் நின்று தங்களின் பாடலின் இனிமையால் எங்கள் இதயங்களை பல லட்சந் துண்டங்களாக பிளந்து விட்டீர்கள்…

நிச்சயமாய் சொல்வேன்.கர்த்தர் செய்த கிருபைகளை ,அவரின் அன்பின் அடர்த்தியை இது வரை எத்தனையோ பாடல்கள் சொல்ல முயன்று வெற்றியும் பெற்றன…அத்தனை பாடல்களையும் தங்கள் பாடல் வென்று விட்டது மோசஸ் அண்ணா..

எங்கள் தமிழ்நாட்டில் ஈரோடு என்கிற சட்டசபை தொகுதியை வெல்ல பணத்தையும் , பரிசில்களையும் தந்து பல அரசியல் கட்சிகள் முயல்கின்றன..ஆனால் நீங்களோ எதுவுமே தராமல் இந்த இனிமையான பாடல் மூலம் உலகில் வாழும் அத்தனை கிறிஸ்தவ இதயங்களையும் ஜெயிச்சிட்டிங்க மோசஸ் .

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo