Aarparipodu Naam Mun – ஆர்ப்பரிப்போடு நாம் முன்

Deal Score0
Deal Score0

பல்லவி

ஆர்ப்பரிப்போடு நாம் முன் செல்லுவோம் – நம
ததிசய நாதனைப் பின் செல்லுவோம்

சரணங்கள்

1. சத்திய மென்ற நம் பட்டயமே
அகத்தியமாயத் தடை வெட்டிடுமே
ஜீவனும் வழியுமானவரே! – நம்
தேவ சுதனார் ஜெயந் தருவாரே – ஆர்ப்பரிப்போடு

2. ஜெபத்துடன் மெய் விசுவாசத்தால்
ஜெயித்திடுவோம் சோதனை எல்லாம்
தவத்துடன் தேவ அருள் பெற்று தினந்தோறும்
போர் புரிவோம் நிலை நின்று – ஆர்ப்பரிப்போடு

3. முன்னவர் ஆவியைத் தந்தாற்போல்,
பின்னவர் வருஷிப்பேன் என்றாற்போல்
தருவார் அருள் ஒவ்வொரு நாளும் – அவர்
வருவார் கிட்டுது ஜெயநாளும் – ஆர்ப்பரிப்போடு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo