Aaththuma Aathaayam Seiguvomae – ஆத்தும ஆதாயம் செய்குவோமே

Deal Score0
Deal Score0

ஆத்தும ஆதாயம் செய்குவோமே – இது
ஆண்டவர்க்குப் பிரியம் – நாமதினால் நாம
ஆசீர்வாதம் பெறுவோம்

அனுபல்லவி

சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்
ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
அற்புதமான பலனை அடையலாம்

சரணங்கள்

1. பாழுலக முழுதையும் ஒருவன் சம்
பாதித்துக் கொண்டாலும் – ஒரு
நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
நஷ்டப்படுத்தி விட்டால்,
ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,
அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே – ஆத்தும

2. கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
மட்டில்லா தேவசுதன் – வானை
விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
விட்டதும் விந்தைதானே;
துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
இட்டமுடன் செய்த இரட்சணிய வேலையை
இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே – ஆத்தும

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo