ஆத்தும அடைக்கலம் அன்புள்ள – Aathuma Adaikalam Anbulla
ஆத்தும அடைக்கலம் அன்புள்ள – Aathuma Adaikalam Anbulla
1. ஆத்தும அடைக்கலம் அன்புள்ள யேசுவே,
அய்யா, புகலிடம் தாரும்;
காற்றுப் பெருவெள்ளம்போல் சீற்றங் கொள்ளுது துன்பம்,
கைகொடுத் தெனை ஆற்ற வாரும்.
2. நீரே என் நம்பிக்கை, நீரே என் தஞ்சம்;
நீசன் எனக்கு வேறார் அய்யா?
சாரும் நிராயுதன் யான் போரில் விழாப்படித்
தாங்கும் உன் மறைவினில், அய்யா.
3. நீதம் கெட்ட பாவி யான், நீதி பரி சுத்தமும்
நிறைந்த நீர் எனக்குத்ர வாதி;
பாதகத்தால் நிறைந்த பேதையான்; கிருபை சத்தியம்
பரிபூரணம் உள்ளோன் நீர் ஜோதி.
4. எந்தப் பாவமும் மூடும் விந்தைக் கிருபை உண்டும்மில்,
என் பாவம் தீர்த்தருளும், கோவே!
நொந்த எனை நீர் ஆற்றிச் சிந்தையைப் புதுப்பித்து
நோக்கும் அதைத் துய்யதாய், தேவே.
5. ஜீவ ஊற்றே, உம்மில் யான் தெளிந்து குடிப்பேனாக;
தீராத தாகங்கள் தீரும்;
ஓவா நித்தியமட்டாகப் பாவி என் நெஞ்சில் ஊறும்
உன்னத அன்பன் யேசு, வாரும்.
Aathuma Adaikalam Anbulla song lyrics in English
1.Aathuma Adaikalam Anbulla Yesuvae
Aiya Pugalidam Thaarum
Kattru Peru Vellam Poal Seettram Kollum Thunbam
Kai Kodu Thennai Aattra Vaarum.
2.Neerae En Nambikkai Neere En Thanjam
Neesan Enakku Vearaar Aiya
Saarum Nirayuthan Yaan Poaril Vilappadi
Thaangum Un Maraivinil Aiya
3.Neetham Ketta Paavi Yaan Neethi Pari suththamum
Niraintha Neer Enakkuthara Vaathi
Paathakaththaal Nirantha Peathaiyaan Kirubai Saththiyam
parpooranam Ulloan Neer Jothi.
4.Entha Paavamum Moodum Vinthai Kirubai Undummil
En Paavam Theertharulum kovae
Nontha Enai Neer Aattri Sinthaiyai puthupithu
Nokkum Athai Thuiyathaai Devae
5.Jeeva Oottrae Ummil Yaan Thealinthu Kudipeanaga
Theeratha Thaagangal Theerum
Oovaa Niththiya Mattaga Paavi En Nenjil Oorum
Unnatha Anban Yesu Vaarum.