AAVI EN DEVANIL – ஆவி என் தேவனில்
பல்லவி
ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறது
ஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ
சரணம் – 1
அடிமையின் தாழ்மையை பார்த்தார்.. மகிமையை என்னில் செய்தார்;
சிந்தையில் அகந்தையுள்ளோரை சிதறடித்து வீரம் சிறந்தார்
அவர் நாமம் பரிசுத்தமுள்ளது…வல்லமை மகிமையுடையது
விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….
சரணம் – 2
பலவானைத் தள்ளிவிட்டார் தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்
பசித்தோரை நன்மையால் நிரப்பி செல்வந்தரை வெறுமை ஆக்கினார்
அவர் இரக்கம் என்றும் பெரியது தலைமுறைக்கும் மாறாதது
விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….