
அகிலத்தைப் படைத்து ஆள்பவரே-Agilathai padaithu Aalbavarae
அகிலத்தைப் படைத்து ஆள்பவரே
அதிசயம் அற்புதங்கள் செய்பவரே-2
முடவனையும் நடக்கச் செய்தீர்
குருடனையும் பார்க்கச் செய்தீர்-2
உம்மையே போற்றுவோம்
உம்மையே புகழுவோம்
உம்மையே வாழ்த்துவோம்
உம்மையே வணங்குவோம்
1. உம்முடைய மகா பலத்தினாலும்
நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும்
வானத்தையும் பூமியையும்
உண்டாக்கினீர் உண்டாக்கினீர்
2. மாமிசமான யாவருக்கும்
தேவனாகிய கர்த்தர் நீரே
உம்மாலே செய்யக்கூடாத
அதிசயங்கள் ஒன்றுமில்லை
3. லாசரை உயிரோடு எழுப்பினீரே
தண்ணீரை திராட்ச ரசமாக்கினீரே
எங்களுடைய வியாதியையும்
சுகமாக்க உம்மாலாகும் (or)
சுகமாக்கும் வல்லவரே
4. உயிருள்ளவரைக்கும் உமக்காக
வாழ்ந்திட எங்களை அர்ப்பணிக்கிறோம்
வரங்களினால் கனிகளினால்
நிரப்பி எம்மை பயன்படுத்தும்