அக்கினியாய் என்னை மாற்றுங்க – Akkineyaai Ennai Maatrunga
Deal Score0
Shop Now: Bible, songs & etc
அக்கினியாய் என்னை மாற்றுங்க – Akkineyaai Ennai Maatrunga
அக்கினியாய் என்னை மாற்றுங்க
ஆவியால என்னை நிரப்புங்க
இயேசுவே என் இயேசுவே – 2
நான் உம்மை நோக்கி பார்க்கின்றதால்
நான் வெட்கப்பட்டு போவதில்ல
நான் உம்மை நம்பி வாழ்கின்றதால்
நீர் என்னை விட்டு விலகவில்லை -2
- தகப்பனும் தாயும் என்னை தள்ளி விட்டாலும்
நான் நம்பினோர் எல்லாம் என்னை வெறுத்து விட்டாலும் -2
நீர் என்னை தள்ளவில்லை தள்ளவேயில்லை
நீர் என்னை வெறுக்கவில்லை வெறுக்கவே இல்லை – 2 - மரண பள்ளத்தாக்கிலே நான் நடந்து சென்றாலும்
கண்ணீரின் பள்ளத்தாக்கிலே நான் கலங்கி நின்றாலும் -2
ஒரு பொல்லாப்பும் அணுகாது அணுகவே அணுகாது
என் நம்பிக்கை வீண் போகாது போகவே போகாது – 2 - எனக்கு எதிராக ஒரு யுத்தம் வந்தாலும்
என் முகத்திற்கு எதிராக அந்த சத்துரு வந்தாலும் – 2
என் நெஞ்சம் அஞ்சாது அஞ்சவே அஞ்சாது
அது – ஜெயிக்காமல் இருக்காது இருக்கவே இருக்காது – 2 - வறுமையில் வெறுமையில் நான் வாழ்ந்து வந்தாலும்
வியாதியின் கொடுமையில் நான் சோர்ந்து போனாலும் – 2
என் உள்ளம் தூங்காது தூங்கவே தூங்காது
அது – துதிக்காமல் இருக்காது இருக்கவே இருக்காது – 2