Akkini Abishegam Aaviyin – அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்
Akkini Abishegam Aaviyin – அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்
அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்
சுட்டெரித்திடும் என்னை சுத்திகரித்திடும்
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பிடும்
பரிசுத்தமாய் என்னை மாற்றிடும்
1. அக்கினி போட வந்தேன் பற்றயெறியட்டும்
என்று சொன்னவரே இன்று அபிஷேகியும்
2. ஆவியினாலே சரீரத்தின் – பாவ
இச்சையை என்னில் சுட்டெரித்திடும்
3. உம்மைப் போலவே என்னை மாற்றிடும்
சுயம் என்னிலே சாம்பலாகட்டும்
4. அபிஷேகமே கற்றுக் கொடுத்திடும் – என்று
சொன்னவரே என்னை அபிஷேகியும்