
Akkiniyil Nadanthu Vanthom அக்கினியில் நடந்து வந்தோம் song lyrics
அக்கினியில் நடந்து வந்தோம்
ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பா
தண்ணீரைக் கடந்து வந்தோம்
நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பா
உங்க கிருபை எங்களைவிட்டு இமைப்பொழுதும் விலகலப்பா
எங்கள் தேவன் நீர்
எங்கள் ராஜா நீர்
நாங்கள் போற்றிடும்
கன்மலை நீர்
செங்கடலை நீர் பிளந்தீர்
செம்மையான பாதை தந்தீர்
எரிகோவின் கோட்டைகளை
உம் யோசனையால் தகர்த்தீர்
கோலியாத்தின் கோஷங்களை
ஒரு நொடியில் வென்று விட்டீர்
பலவித சோதனையால்
புடமிடப்பட்டோமையா
பொன்னாக மாற்றிவிட்டீர்
புது இருதயம் தந்து விட்டீர்
எங்கள் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்து விட்டீர்
வருடங்களை உமது
கிருபையினால் கடந்தோம்
இனிவரும் நாட்களெல்லாம்
உம் மகிமைதனைக் காண்போம்
எங்கள் ஆயுள் உள்ளவரை
இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்