ALAIKIRAR ALAIKIRAR ITHO NEEYUM VAA – அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

Deal Score+2
Deal Score+2
ALAIKIRAR ALAIKIRAR ITHO NEEYUM VAA – அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
 
அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் – இதோ

சரணங்கள்

1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
கண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் — அழைக்கிறார்

2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் — அழைக்கிறார்

3. துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ — அழைக்கிறார்

4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ — அழைக்கிறார்

5. கல்லறைத் திறக்கக் காவலர் நடுங்கக்
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் , ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே — அழைக்கிறார்

6. சாந்த சொரூபனே ! சத்திய வாசனே !
வஞ்சமற்ற வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார் — அழைக்கிறார்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo