Anthakaara boomi Idaiya – அந்தகாரப் பூமி இதையா

Deal Score0
Deal Score0

அந்தகாரப் பூமி இதையா – இருளோடி மெய்
அவிரொளி உதித்ததையா
சிந்தை இருள்மீடிக் கெட்டுச்
சந்ததமும் உன்னைவிட்டு
நிந்தைகள் இலச்சைப்பட்டு
நேசமுற்று மோசம் போன

சரணங்கள்

தேசங்கள் கடல்களெங்கும் – உந்தன் வேத
சேதியின் பலன்கள் தங்கும்
காசினியோர்கட்குப் பொங்கும் அளவில்லாத
களிப்புகளுண்டாயிலங்கும்
என்றமொழி யிந்தக்காலம்
உண்மையாச்சு துந்தன்சீலம்
ஏழைகளுக் கனுகூலம்
இன்றுவந்த துமக்கோலம் – அந்த

கஷ்ட நஷ்டங் கொண்டுவாடிக் கணக்கில்லாத
கவலைக ளாலுமூடிக்
கர்த்தனே உனைமன்றாடிக் கண்ணீராறாய்க்
கதறியச் செபித்துத் தேடிச்
சத்திய சுவிசேட
வித்தினை யிங்குபோட
வந்தவர்க் கன்பைநாட
வந்தனம் ஐயா காரும். – அந்த

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo