Antru Thuyar Neekkum Narseithiyaai christmas song lyrics – அன்று துயர் நீக்கும் நற்செய்தியாய்
Antru Thuyar Neekkum Narseithiyaai christmas song lyrics – அன்று துயர் நீக்கும் நற்செய்தியாய்
அன்று துயர் நீக்கும் நற்செய்தியாய்
நமக்காக பிறந்தாரே -(2)
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
உலக இரட்சகர் பிறந்தாரே -(2)
உனக்காக எனக்காக
இம்மானுவேலனாய் இருக்கின்றார் -(2)
1. வானங்கள் தோன்றும் முன்னே
வார்த்தையாய் இருந்த தேவன்
மாம்சமாய் மாறினாரே
இருளை அகற்றிடவே -(2)
அகற்றினார் இயேசு அகற்றினார்
பாவம் இருளை அகற்றினார் -(2)
உனக்காக எனக்காக
உன்னத மேன்மை வெறுத்தார் -(2)
2. உலக தோற்றம் முன்னே
என்னை தெரிந்து கொண்டார்
என்னை மீட்டுக் கொள்ள
உலகத்தில் உதித்தாரே -(2)
உதித்தாரே இயேசு உதித்தாரே
என்னுள்ளத்தில் அவர் உதித்தாரே -(2)
உனக்காக எனக்காக
உன்னதர் மீண்டும் வருவாரே -(2)
Song: PIRANTHAARAE YESU
Lyrics & Sung: Daat Albino & Sunitha