Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல்
Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல்
அருளே என் உயிரே – என் அன்பே நீ வா வா
உயிராய் என் உணர்வாய் உறைந்திடவே வா வா
1.அன்னை மரி ஈன்றவரே அழகாய் அவனி வந்தவரே இறைவனின் அருள் சுனையே
இணையில்லா இறைமகனே
இயேசுவே இயேசுவே குழந்தை இயேசுவே வாருமே வாருமே உள்ளம் வாருமே
அழகான தமிழில் இசை பாடவா – என்
இதயம் எழுந்து நீ வா
2.மழலை சிரிப்பினிலே சிலிர்க்கின்றேன் மகிழ்கின்றேன்
மன்னவன் வரவினிலே என் இதயம் நெகிழ்ந்திடுதே —2
இதயமே இன்பமே குழந்தை இயேசுவே
இதய கோயில் குடில்கொள்ள. எழுந்து வாருமே
இதயமே இன்பமே குழந்தை இயேசுவே
இதய கோயில் குடிகொள்ள எழுந்து வாருமே
உளம் உவந்து உந்தன்
புகழ் பாடவா
என் உயிரில் கலந்து நீ வா