அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae
அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae
அதிசயம் அற்புதம் நடக்குதே இயேசுவின் நாமத்தினால்
நோய்களும் பேய்களும் ஓடுதே இயேசுவின் நாமத்தினால்
வெற்றி உண்டு வெற்றி உண்டு
இயேசுவின் நாமத்தினால் – நமக்கு
வெற்றி உண்டு வெற்றி உண்டு
இயேசுவின் நாமத்தினால் – நம்
இயேசுவின் நாமத்தினால்
வியாதிகளும் மறைந்திடுதே இயேசுவின் நாமத்தில்
சாபங்களும் விலகிடுதே இயேசுவின் நாமத்தில்
வியாதிகளும் மறைந்திடுதே இயேசுவின் நாமத்தில்
சாபங்களும் விலகிடுதே இயேசுவின் நாமத்தில்
பாவ சாப வல்லமைகள் இன்று இங்கு அடங்கிடும்
இயேசுவின் நாமத்தில்
இயேசுவின் நாமமே சுகமளித்திடும் நாமமே – 2
தோல்விகளில் ஜெயமெடுப்போம்(பேன்) இயேசுவின் நாமத்தில்
சத்துருவை துரத்திடுவோம்(வேன்) இயேசுவின் நாமத்தில்
தோல்விகளில் ஜெயமெடுப்போம்(பேன்) இயேசுவின் நாமத்தில்
சத்துருவை துரத்திடுவோம்(வேன்) இயேசுவின் நாமத்தில்
ஜெயம் உண்டு சுகம் உண்டு பெலன் உண்டு சர்வ வல்ல
இயேசுவின் நாமத்தில்
இயேசுவின் நாமமே ஜெயமளித்திடும் நாமமே – 2
கலங்கிடேன் நான் திகைத்திடேன் நான் இயேசு எனக்குண்டு
என் சுகவாழ்வின்று துளிர்த்திடுதே இயேசுவின் நாமத்தில்
கலங்கிடேன் நான் திகைத்திடேன் நான் இயேசு எனக்குண்டு
என் சுகவாழ்வின்று துளிர்த்திடுதே இயேசுவின் நாமத்தில்
இன்று இங்கு இப்பொழுதே அதிசயம் கண்டிடுவேன்
இயேசுவின் நாமத்தில்
இயேசுவின் நாமமே என்னை மீட்டிடும் நாமமே
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
பிலிப்பியர் 2:9-10