
அழகான அத்திமரம் – Azhagana Aathimaram lyrics
அழகான அத்திமரம் – Azhagana Aathimaram lyrics
1. அழகான அத்திமரம்
பசுமையான அத்திமரம்
பசியோடு இயேசு வந்தாரே
கனி தேடி அருகில் வந்தாரே
கனி ஒன்றுமில்லை பயன் ஏதுமில்லை
அழகான அத்திமரம் காய்ந்து போனதே (2)
2. பொலிவுள்ள பழத்தோட்டம்
வேலியுள்ள கனித்தோட்டம்
கோபுரமும் ஆலை அமைத்தவர்
ஆவலுடன் அருகில் வந்தாரே
கனிகள் தந்தது கசப்பான கனிகள்
தேவன் தந்த பாதுகாப்பை இழந்து போயிற்றே (2)
3. கனி தேடி வந்து விட்டார்
உந்தன் அருகில் வந்துவிட்டார்
இயேசுவை நீ ஏமாற்றிடாதே
அருமையான கனிகள் தந்திடு
ஆவியின் கனிகள் அனைத்துமே தந்து
ஆண்டவரின் ஆசியை பெற்று மகிழ்ந்திடு (2)