Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே

Deal Score+1
Deal Score+1

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே

அழைத்ததும் கேட்பவரே
அன்போடு அணைப்பவரே
வேண்டியதற்கு அதிகமாய்
ஆசையாய் தருபவரே -2
என் வாழ்வின் உயரங்களை
ஏக்கமாய் கொண்டவரே
என் வாழ்வின் உயரங்களுக்கு
காரண கர்த்தரே – 2
ஆராதிப்பேன் உயர்த்துவேன்
உன்னதரே உயர்ந்தவரே – 2

எதிர்பார்த்த நேரங்களில்
ஏமாற்றம் வந்ததே
நெருங்கி நின்ற நண்பர்களின்
தூரம் புரிந்ததே – 2
அப்பா உம் தோள்களிலே
பிள்ளையாய் வாழ்ந்திடவே
என் உள்ளம் ஏங்கிடுதே
ஏற்றுக் கொள்ளும் தகப்பனே – 2
– ஆராதிப்பேன்

இருள் சூழ்ந்த நேரங்களில்
வெளிச்சத்தை தந்தீரே
சிவப்பான பாவங்களை
பனியை போல் மாற்றினீர் -2
குயவனே உம் கையில்
மண்ணாக இருந்த என்னை
உருவாக்கி உயர்த்தீனீரே
உமக்கேற்ற பாத்திரமாய் – 2
– ஆராதிப்பேன்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo