பாக்கியர் இன்னார் என்றிறைவன் – Bakkiyar Innar Entriraivan

Deal Score+1
Deal Score+1

பாக்கியர் இன்னார் என்றிறைவன் – Bakkiyar Innar Entriraivan

பல்லவி

பாக்கியர் இன்னார்-என்றிறைவன்
பண்புடன் சொன்னார்.

அனுபல்லவி

ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே
அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில், – பாக்

சரணங்கள்

1. ஆவி பணிந்தோர்,-மனத்தாழ்மை-யான தணிந்தோர்,
பாவிகள் தாமென்று பயந்து நடப்போர்
தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர். – பாக்

2. துக்கப்படுவோர்,-பவத்துக்காய்த்-துயரப்படுவோர்
விக்கினமின்றி எந் தேவன் அருளினால்
மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர். – பாக்

3. சாந்த குணத்தோர்,-சண்டைகோப-தாபம் வெறுத்தோர்,
வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர்
மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்கியர். – பாக்

4. நீதியின் பேரில்-பசி தாகம்-நித்தம் கொள்வோரில்
போத மெய்ப் புத்தியும் பூரண பத்தியும்,
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர். – பாக்

5. இரக்க முடையோர்,-பிறர்மீது-உருக்கமுடையோர்,
நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர்
பெருக்க இரக்கம் பெற்றிடும் பாக்கியர்; – பாக்

6. சுத்தநெஞ்சத்தார்,-தேவனருன்-சுகிர்த ஜென்மத்தார்
பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின்
பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்கியர். – பாக்

7. சமாதானத்தை-நடப்பித்துச்-சல்யம் வாதத்தைத்
தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர்
நமதேகன் சேயர்கள் என்னும் மெய்ப்பாக்கியர். – பாக்

8. நற்செய்கை யிட்டுப்-பகைஞரால்-நஷ்டங்கள் பட்டுத்
துர்செய்கை நீங்கியே துன்பப் படுவோர்
சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்கியர். – பாக்

Bakkiyar Innar Entriraivan song lyrics in English

Bakkiyar Innar Entriraivan
Panpudan Sonnaar

Aakkiyoan Yesuvin Vaakkiyam Keatkavae
Ananthamaana Janam Vananthanil Nirkaiyil

1.Aavi Paninthor Manaththaalmaiyaana Thaninthor
Paavigal Thamentru Bayanthu Nadappoar
Devanin Rajyam Searvathaal Baakkiyar

2.Thukkapaduvoar Pavaththukkaai Thuyarapaduvoar
Vikkinamintri Endeavan Arulinaal
Mikka Meiyaaruthal Meetpurum Baakkiyar

3.saantha Gunathoar Sandai Koba Thaabam Veruthoar
Vanthanaar Seigaiyul Saanthanaiyum Kolvoar
Meathini Vaalvilum Vinnilum Baakkiyar

4.Neethiyin Pearil Pasi Thaagam Niththam kolvorail
Potha Mei Puththiyum Pooran Bakthiyum
Kaathalan Aavi Kadatchippar Baakkiyar

5.Erakka Mudaiyoar pirar Meethu Urukkamudaiyoar
Nerukkapaduvoarkku Neayamuttru Thavuvoar
Perukka Erakkam Pettridum Baakkiyar

6.Suththa Nenjathaar Devanarun Sugirtha Jenmaththaar
Bakthiyil Varththithu Niththamum Devanin
Parisuththa Samoogaththai Tharisikkum Baakkiyar

7.Samathanaththai Nadapiththu Salyam Vaathathai
Thamathurai Nadaikkaiyaal Thalli Oluguvor
Namatheagan Seayargal Ennum MeiBaakkiyar

8.Narseithi Yittu Pagaingaraal Nasatangal Pattu
Thurseigai Neengiyae Thunba Paduvoar
Sugalogam Searnthentrum Mugiyatha Baakkiyar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo