சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் – Chinanjiru Vannamalar Paalan song lyrics
சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் – Chinanjiru Vannamalar Paalan song lyrics
சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன்
அன்னை மரி ஈன்றெடுத்த தேவன்
விண்ணுலக மண்ணுலக வேந்தன்
என்னில் இன்று மலர்ந்த ராஜன்
பிறந்த நாள் இன்று பிறந்த நாள்
பாலன் பிறந்த நாள்
Happy Christmas to you
ஆரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராராரோ ஆரிராரிராரோ
தாவிதின் வம்சம் யுதாவின் சிங்கம்
பெத்லேகேம் ஊரில் பிறந்தது
ஆயரின் கூட்டம் விண்மீன்கள் ஆட்டம்
மீட்பனை கண்டு துதித்தது
நிதி நேர்மை வளர்திடவே
நிம்மதி வாழ்வில் மலர்ந்திடவே
வாழ்வின் பொருளை காட்டிடவே
வளமை யாவும் ஊட்டிடவே
ஆதி முதல்வன் அன்பின் கலைஞன்
அமைதியின் மன்னன் தொன்றி விட்டான்
சங்கத்தமிழ் பாட்டு சந்தங்களை சேர்த்து
செங்கமல வண்டுறங்க சிந்து பாடுவோம்
மங்களங்கள் பொங்க நெஞ்சமதில் வந்த
தங்கச்சுடர் மன்னவனை தாலாட்டுவோம்
தூங்கும் விழிகள் ஒளி காணவே
இங்கு கதிரவன் உருவாகவே
எங்கும் மணங்களில் உரவாகவே
தங்கி வாழ்ந்திட உயிரானதே
வங்க கடலே பொங்கும் அமுதே
இன்ப மழையே ஆராரிரோ
Chinanjiru Vannamalar Paalan – Tamil Catholic Christmas Song