
Chinnavan Ennai Song lyrics – சின்னவன் என்னை
Chinnavan Ennai Song lyrics – சின்னவன் என்னை
LYRICS (in Tamil)
சின்னவன் என்னை ஆயிரமாக்கி,
அளவில்லாமல் உயர்த்துபவர் நீரல்லவோ,
சிறியவன் என்னை பலத்த ஜாதியுமாக்கி,
பெருகச் செய்ய நினைப்பவர் நீரல்லவோ -(2)
நீரே எனக்காக யுத்தம் செய்பவர்,
நீரே எனக்காக கிரியை செய்பவர்,
நீரே எனக்காக யாவும் செய்பவர்,
நீரே எல்லாமே செய்து முடிப்பவர் -(2)
1) அற்பமாய் கண்ட கண்கள் ஏராளம்,
அற்பனாம் என்னையும் உம் கண்கள் கண்டதே -(2)
ஆடுகள் பின்னாலே அலைந்த என்னை,
அதிபதியாக மாற்றிவிட்டீரே;
ஆடுகள் பின்னாலே அலைந்த என்னை,
அரியணை இன்னதென்று ருசிக்க செய்தீரே ….(நீரே)
2) சின்னவன் என்னை தேடி வந்தீர்,
எண்ணிமுடியாத திட்டங்கள் தந்தீர் -(2)
என்றும் என்னோடு இருப்பேன் என்று,
வாக்குரைத்து அதை செய்திட்டீரே;
என்றும் என்னோடு இருப்பேன் என்று,
வாக்குரைத்து அதை நிரூபித்தீரே ….(நீரே)
3) என்னிடம் ஒன்றும் இல்லாதிருந்தும்,
உன்னத அழைப்பை என்மேல் வைத்தீர் -(2)
தகுதியே இல்லாத என்னிடம் வந்தீர்
தகுதியை பாராமல் தெரிந்துகொண்டீர்;
தகுதியே இல்லாத என்னிடம் வந்தீர்,
தகுதியை பாராமல் உயர்த்தி வைத்தீர் ….(நீரே)
Chinnavan Ennai Song lyrics in English
Chinnavan Ennai Aairamaakki
Alavillaamal Uyarthubavar Neerallavo
Siriyavan Ennai Balaththa Jaathiyumaakki
Peruga Seiya Ninaippavar neerallavo
Neerae Enakkaaga Yuththam Seibavar
Neerae Enakkaaga Kiriyai Seibavar
Neerae Enakkaaga Yaavum Seibavar
Neerae Ellaamae Seithu Mudippavar
1.Arpamaai Kanda Kangal Yearaalam
Arpanaam Ennaiyum Um Kankal Kandatahe
Aadugal Pinnalae Alaintha Ennai
Athipathiyaaga Maattrivitteerae
Aadugal Pinnalae Alaintha Ennai
Ariyanai Innathentru Rusikka Seitheerae
2.Chinnavan Ennai Theadi Vantheer
Ennimudiyatha Thittangal Thantheer
Entrum Ennodu Iruppean Entru
Vaakkuraiththu Athai Seithitteerae
Entrum Ennodu Inruppean Entru
Vakkuraiththu Athai Nirupiththeerae
3.Ennidam Intrum Illathirunthum
Unnatha Alaippai En Mael Vaiththeer
Thaguthiyae Illatha Ennidam Vantheer
Thaguthiyai Paaraamal Therinthu Kondeeer
Thaguthiyae Illatha Ennidam Vantheer
Thaguthiyai Paaraamal Uyarththi Vaitheer