
Deivaavi Manavaasaraai – தெய்வாவி மனவாசராய்
1. தெய்வாவி, மனவாசராய்,
வந்தனல் மூட்டுவீர்;
உம் அடியாரின் உள்ளத்தில்
மா கிரியை செய்குவீர்.
2. நீர் சோதிபோல் பிரகாசித்து,
நிர்ப்பந்த ஸ்திதியும்
என் கேடும் காட்டி, ஜீவனாம்
மெய்ப் பாதை காண்பியும்.
3. நீர் வான அக்னிபோலவே,
துர் ஆசை சிந்தையும்
தீக் குணமும் சுட்டெரிப்பீர்,
பொல்லாத செய்கையும்.
4. நற் பனிபோலும் இறங்கும்
இவ்வேற்ற நேரத்தில்;
செழிப்புண்டாகச் செய்திடும்
பாழான நிலத்தில்.
5. புறாவைப்போல சாந்தமாய்
நீர் செட்டை விரிப்பீர்;
மெய்ச் சமாதானம் ஆறுதல்
நற் சீரும் அருள்வீர்.