Deva Devaa thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா
பல்லவி
தேவ தேவா! திரியேக தேவா!
தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா!
சரணங்கள்
1. ஆவலாக எதிர் பார்த்த அடியார்
ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த – தேவ
2. சென்ற ஆண்டினில் வந்த சோதனைகளில்
நின்று காத்தருள் புரிந்த நன்றியுணர்ந்து – தேவ
3. பஞ்சம் படைக்கும் பல கொள்ளை நோய்க்கும்
சஞ்சலங்களின்றி சமாதானமாய்க் காத்த – தேவ
4. இந்த ஆண்டினில் வரும் இடர் யாவுக்கும்
எந்தையே எமக்கிரங்கி என்றும் ஆண்டிடும் – தேவ
5. பாவி மீளவே பிசாசு மாளவே
பாரி லேசு நாம மெங்கும் பரம்பி வாழவே – தேவ