
Deva Devanae Yehova -தேவ தேவனே எகோவா
தேவ தேவனே எகோவா,
வா, என் ஜீவனே
அனுபல்லவி
காவலர்க் குபதேசனே – கனபாவிகட் கதிநேசனே – உயர்
கர்த்தன் ஏக திரித்துவ ஞான மகத்துவ ராஜகிறிஸ்துவாகிய – தேவ
சரணங்கள்
1. அந்த மேனியே – கனம் பெரும் – அனந்த ஞானியே
விந்தை மானியே – சுதந்தரம் – மிகுந்த தானியே
தந்தையர் தர வந்தவா பசு
மந்தை யூடு பிறந்தவா கதி
தந்தவா சொல் உவந்தவா மெய்
சிறந்தவா விண்ணெழுந்தவர் திவ்ய
2. சத்திய வாசனே யூதர்குலத் தவிது ராஜனே
நித்திய நேசனே அடியவர் நிலைமை ஈசனே
பத்தருக்குப காரனே வா
பெத்தலைக் கதிகாரனே கன
பாரனே அதிதீரனே நல்
உதாரனே பெல வீரனே ஜெய
3. வான சீலனே மனு உரு வான கோலனே
ஞான பாலனே அதிசய நன்மை நூலனே
பானுவே மனுவேலனே இம்
மானுவேல் அனுகூலனே கன
பத்தியே தரு துத்தியமே நெடு
நித்தியமாய் வளர் வஸ்துவே ஒரு