
Deva Mainthan Unnai Ratchika – தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க
1. தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க
தேவலோகம் விட்டு தரணியில் வந்தார்!
2. உந்தன் பாவம் பரிகரிக்க
சொந்த கைகால்களை ஆணிகட்கொப்பித்தார்!
3. கருணேசன் இதோ நிற்கிறார்!
குருசு சுமந்து உனக்காய் பாவியே!
4. உன்னை மீட்டுக்கொள்வதற்காக
சிந்தின இரத்தத்தை தெளிவாய் பார்த்திடு
5. தீமையை விட்டகன்றிடு நீ
இரட்சகர்க்காக நல் ஜீவியம் செய்திடு
6. அவரில் சார்ந்து ஜீவிப்பவர்
பரத்தில் என்றென்றும் வாழ்ந்து சுகிப்பாரே
7. மோக்ஷ ராஜ்யம் தருவதற்காய்
பிதாவின் சன்னிதியில் உனக்காய் நிற்கிறார்