Deva suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார்

Deal Score0
Deal Score0

1. தேவன் சுதன் தந்தார்
ஓ! மா அன்பு;
பாவம் நீக்கி மீட்டார்
ஓ! மா அன்பு;
மா பாவியானாலும்
நிர்ப்பந்தனானாலும்
என்னைக் கைதூக்கினார்
ஓ! மா அன்பு.

2. தேவ வலப் பக்கம்,
ஓ! மா அன்பு;
காண்கிறேன் மீட்பரை
ஓ! மா அன்பு;
என் குணம் மாற்றுறார்
சன் மார்க்க னாக்குறார்
என்னை ஈடேற்றுறார்
ஓ! மா அன்பு.

3. நம்புறேன் நெஞ்சத்தில்
ஓ! மா அன்பு;
பேர் உண்டு சொர்க்கத்தில்
ஓ! மா அன்பு;
என் பயம் நீங்கிற்று
என் பாவம் போயிற்று;
சந்தோஷம் ஆயிற்று
ஓ! மா அன்பு.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo