Devaa Ennai Padaikkirean – தேவா என்னை படைக்கிறேன்
1. தேவா என்னைப் படைக்கிறேன்
இதோ என் யாவும் தாறேன்
உந்தன் மா நேசம் எந்தனை
பந்திப்பதினால்
என் நேசம் பாசம் யாவையும்
இதோ அங்கீகரியும்
உம்மால் காக்கப்பட்டென்றும் நான்
நிலைத்திருப்பேன்!
பல்லவி
ஜெயம்! ஜெயம்! அல்லேலூயா!
எனதெல்லாம் படைத்தேன்!
பூரண இரட்சிப்படைந்தேன்
மீட்பர் இரத்தத்தால்
2. என் மனம் சித்தம் யாவுமே
சந்தோஷமாய் நான் தாறேன்;
பூரணமாய் சுத்தஞ் செய்யும்
தீமையை நீக்கும்;
தாறேன் என் முழு ஜீவனை!
கேளும் என் விண்ணப்பத்தை!
உம் சொந்தம் ஆனதால் இப்போ
நான் படைக்கிறேன் – ஜெயம்
3. தேவா நான் உம் ஏவுதலால்
பூசையாய்ப் படைக்கிறேன்
இரத்தத்தால் வாங்கப்பட்டதால்
நம்பி ஜீவிப்பேன்;
நேச சர்வ வல்லவரே
எனக்கும்மைக் காட்டுமேன்
மரித்தும்மைப் பார்க்கும் மட்டும்
பாதை காட்டுமேன் – ஜெயம்