Devane saranam Yesuve saranam – தேவனே சரணம் இயேசுவே சரணம்
Devane saranam Yesuve saranam – தேவனே சரணம் இயேசுவே சரணம்
தேவனே சரணம் இயேசுவே சரணம்
ஆவியே சரணம் சரணம்
யேகோவா சரணம் ஏல்ஷடாய் சரணம்
தெய்வமே சரணம் சரணம்
1. தேடி வந்த தெய்வமே சரணம்
தேற்றுகின்ற தெய்வமே சரணம்
பாடுகின்றேன் உம்மையே சரணம்
நாடிடுவேன் என்றுமே சரணம்
2. தாவீதைப் போல் ஆடுவேன் சரணம்
சங்கீதங்கள் பாடுவேன் சரணம்
சாட்சியாக வாழுவேன் சரணம்
மேளதாள ஓசையோடு சரணம்
3. என்ன நிந்தை வந்தாலும் சரணம்
எது நேரிட்டாலுமே சரணம்
தேவன் என் பக்கத்தில் சரணம்
பயம் எனக்கில்லையே சரணம்