தேவாதி தேவே நீரே – Devathi Devea Neerae

Deal Score+2
Deal Score+2

தேவாதி தேவே நீரே – Devathi Devea Neerae

தேவாதி தேவே நீரே சேவிக்கில் உமை
ஜீவார்தம் தரு வீரே

அனுபல்லவி

ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப்
பாவாலும் எவர்முனும் ஓவா தறிக்கை செய்து – தேவாதி

சரணங்கள்

நன்றே அருள் என்றே கொலைக்குச் சென்றாய் – மரித்
தன்றே நீ பேயை முற்றும் வென்றாய்
நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பி
நேசா விஸ்வேசா இராசா சருவ ஜீவ – தேவாதி

பொல்லா உலகம் அல்லோ இதனில் செல்லா -துணை
நல்லாயனே என்பேன் வல்லாய்
சல்லாப நூலில் அதி உல்லாச மேவிநிதம்
தாயா மாதூயா நன்னேயா சுரர்கள் பதி – தேவாதி

பண்டே மறைகை கொண்டே இதயந் தொண்டே – புரிந்
தண்டே வரும் உதவி உண்டே
விண்டே குறைகளும் தண்டை சுகிர்தமாகும்
வேதா என் தாதா அதீதா மகத்வமான – தேவாதி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo