Dhevane naan umathandaiyil lyrics tamil christian songs

Deal Score+2
Deal Score+2

தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே
யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டு
இராவில் இருள் வந்து மூடிட
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே
பரத்திற்கேறும் படிகள் போலவே — என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை அழைத்து
அன்பின் தூதனாகச் செய்யும் — தேவனே
நித்திரையினின்று விழித்து — காலை எழுந்து
கர்த்தாவே! நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய், என் துயர் கல் நாட்டுவேனே
என்றான் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் — தேவனே
ஆனந்தமாம் செட்டை விரித்து — பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங்கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மை
கிட்டிச் சேர்வேன் — தேவனே

Dhevane naan umathandaiyil – innum nerungi
servathe en aaval boomiyil
maavaliya goramaaga vansiluvai meethinil naan
kovey thonga neridinum
aavalaai um andai serven
1. yaakobaipol pogum padhaiyil – pozhuthu pattu
raavil irul vandhu moodida
thookathinaal naan saainthu thoonginaalum en kanavil
nokkiummai kitti serven vaakkadangaa nalla naatha
2. parathukkerum padigal polave – en paadhai thondra
pannum aiya endran dhevane
kirubaiyaaga neer enakku tharuvathellam umathandai
arumaiyaai ennai azhaiththu anbin thoothanaaga seiyum
3. nithiraiyinindru vizhiththu – kaalai ezhunthu
karthaave, naan ummai potruven
iththaraiyil unthan veedaai enthuyar kal naatuvene
endran thunbathin vazhiyaai innum ummai kitti serven
4. Aanathamaam settai viriththu – paravasamaai
aagayathil yeri poyinum
vaana mandalang kadanthu paranthu mele sendridinum
magizhvuru kaalathilum naan maruviyummai kitti serven

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo