Ellai Illatha Um Anbaal song lyrics – எல்லையில்லாத உம் அன்பால்
எல்லையில்லாத உம் அன்பால்
என் மனம் கொள்ளை கொண்டவரே
மகாராஜாவே என் இயேசைய்யா
என்னை ஆளும் மன்னவரே
என் ஆசை நாயகரே
மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்
என்னை வெறுக்கவில்லை
நெரிந்து போன என் வாழ்வை
முறிந்திட விடவில்லை
ஒன்னுமே புரியலப்பா
என அறிவுக்கும் எட்டலப்பா
ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா
தாயைப்போல தேற்றினதை எப்படி நான் சொல்லுவேன்
ஒரு தந்தையப்போல சுமந்தத என்னனனு நான் சொல்லுவேன்
அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமே
என்னையும் கைவிடாத நேசமே