En Aavi Aathma Sareeram – என் ஆவி ஆத்மா சரீரம்
En Aavi Aathma Sareeram – என் ஆவி ஆத்மா சரீரம்
என் ஆவி ஆத்மா சரீரம்
உம் பாதம் அர்பணித்தேன்
நான் பாவி தான் ஆனாலும் நீர்
தூக்கி நிறுத்தினீர்
ஆனந்தம் பேரானந்தம்
பரலோகத்தில் பேரின்பம்
உளையான சேற்றில் நான் மூழ்கி இருந்தேன்
என்னை தூக்கி எடுத்தீரையா
கன்மலைமேல் நிறுத்தி என்னை உறுதிபடுத்தி
என் அடிகள் காத்தீரையா
இருளான வாழ்வில் நிலையின்றி அலைந்தேன்
ஒளிவீசச் செய்தீரையா
பிளவுண்ட மலையில் என்னை மூடி மறைத்து
பிரகாசம் தந்தீரையா
துணையில்லா நேரம் என் கண்ணீரை கண்டு
கரம் கொண்டு அணைத்தீரையா
சிலுவையின் நிழலில் தினம் என்னை நடத்தி
உம் சித்தம் செய்தீரையா