En Aiya thinam Unai Nambi Naan Lyrics – என் ஐயா தினம் உனை நம்பி நான்
En Aiya thinam Unai Nambi Naan Lyrics – என் ஐயா தினம் உனை நம்பி நான்
என் ஐயா, தினம் உனை நம்பி நான்
இருப்பதறியாயோ? – மன
தேங்கும் என் கலி நீங்கும் படி நல்
பாங்கு புரியாயோ?
அன்னை யிடத்தில் என்னை உருவதாய்
வகுத்தவா, கிறிஸ்த்தையா எனதையா
அருள் செய்யாதது மெய்யா இது?
குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம்
கூசி நாணுதே – என்தன்
கோதும்(குற்றம்) நான் செய்த தீதும் மனதில்
கூடத் தோணுதே
சுற்றும் உலகச் சத்துருப்பகை
சூழக் காணுதே
கருதி மொழி உறிதி தனைக்
கருதி வந்தேன் பொறுதி அருள்
உன்னை அல்லாமல் பின்னை வேறெனக்
குதவி இல்லையே – என
துற்ற ஜனமும் சுற்றத்தோர்களும்
உரிமை இல்லையே
பின் எவரிடம் போவேன் சொல்? அது
பெரிய தொல்லையே
பேசும் விசுவாசம் வளர்
நேசக் கதிர் வீச அருள்!
அத்தனே உன்றன் ரத்தத்தால் எனை
ஆற்றித் தேற்றையா – தேவ
ஆவியாகிய ஈவெனும் உன
தருளை ஊற்றையா
நித்தனே என்றன் குற்றத்தையெல்லாம்
நீக்கி ஆற்றையா
நேசா பவ நாசா மறை
வாசா ஏசு ராசா அருள்!
En Aiya thinam Unai Nambi Naan Lyrics in English
En Aiya thinam Unai Nambi Naan
Iruppariyayo Mana
Theangum En Kali Neengum Padi Nal
Paangu Puriyayo
Annai Idaththil Ennai Uruvathaai
Vaguththava Kiristhaiyaa Enathaiyaa
Arul Seiyaathu Meiyaa Ithu
1.Kuttraththaal Unaikitta En Manam
Koosi Naanuthae En Than
Kothum Naan Seitha Theethum Manathil
Kooda Thonuthae
Suttrum Ulaga Saththurupagai
Soozha Kaanuthae
Karuthi Mozhi Uthari Thanai
Karuthi Vanthean Poruthi Arul
2.Unnai Allamal Pinnai Veareanaku
Uthavi Illaiyae
Enathuttra Janamum Suttrathorkalum
Urimai Illaiyae
Pin Evaridam Povean Sol Athu
Periya Thollaiyae
Peasum Visuvaasam Valar
Neasa Kathir Veesa Arul
3.Aththanae Untran Raththathaal Enai
Aattri Theattraiyaa Deva
Aaviyaakiya Eevenum Una
Tharulai Oottrumaiyaa
Niththanae Entran Kuttrathai Ellam
Neekki Aattraiyaa
Neasa Pava Naasa Marai
Vaasa Yesu Raasa Arul