என் தேவன் நல்லவரே-En Dhevan Nallavare
என் தேவன் நல்லவரே
என்னை என்றும் காப்பவரே
என் தேவன் பெரியவரே
என்றும் என்னோடிருப்பவரே-2
எந்தன் சூழ்நிலைகள் உம் கரத்திலே
என் கண்ணீரும் உம் துருத்தியிலே
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
உம்மை நான் பற்றி கொள்வேனே-2-என் தேவன்
1 ஆகாரின் அழுகையை
பிள்ளையின் கதறலை
கண்டவர் நீரல்லவோ
நீரூற்றை கண்டிட கண்களை திறந்தீர்
உந்தன் வல்லமையால்-2 -எந்தன் சூழ்நிலைகள்
2.பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியால் ஆகும் என்றீர்
பலத்த கரமும் ஓங்கிய புயமும்
அற்புதம் செய்திடுமே
பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியால் ஆகும் என்றீர்
இல்லாமை இல்லாமல் மாறி போகும்
நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்-எந்தன் சூழ்நிலைகள்