என் எஜமான் இயேசுவே – En Ejamaan Yesuvae

Deal Score+1
Deal Score+1

என் எஜமான் இயேசுவே – En Ejamaan Yesuvae

பல்லவி:
என் எஜமான் இயேசுவே
என் மேய்ப்பர் நீரே

எனக்கொரு தேவையுமில்லையே – உம்முடைய கிருபையினால்
என்னை வழி நடத்துகிறவர் நீரே – அல்லேலூயா (2)

சரணம்:
நீர் என்னை செழிப்பான இடங்களில்
வழிநடத்தி, மேய்த்து, காப்பாற்றி
ஜீவ தண்ணீருள்ள ஊற்றுகளன்டை (2)
பரலோகம் கொண்டு போகிறீர்
என் மேய்ப்பர் நீரே
ஆமென் அல்லேலூயா (4)

பல்லவி:
என் எஜமான் யேகோவாவே
என் தேறுதல் நீரே
என் பரலோக பாதையும் நீரே – உம்முடைய நாமத்தினால்
என்னை வழிநடத்துகிறவர் நீரே – அல்லேலூயா (2)

சரணம்:
மரண இருளில் நான் நடந்தாலும்
எந்த பொல்லாப்புக்கும் பயப்படேன்
நீர் என்னோடிருந்து உமது கோலால் (2)
உம் வார்த்தையால் என்னை தேற்றுகிறீர்
என் தேறுதலும் நீரே
ஆமென் அல்லேலூயா (4)

பல்லவி:
என் எஜமான் தேவாவியே
என் அபிஷேகம் நீரே
என் தலையை உயர்த்துபவர் – உம்முடைய காருண்யத்தால்
என்னை வழி நடத்துகிறவர் நீரே – அல்லேலூயா (2)

சரணம்:
நன்மையும் கிருபையும் ஜீவனுள்ள
நாளெல்லாம் என்னை தொடரும்
என் தகப்பன் வீட்டில் பரலோகத்தில் (2)
நெடு நாளாய் நிலைத்திருப்பேன்
என் அபிஷேகம் நீரே
ஆமென் அல்லேலூயா (4)

பல்லவி:
என் எஜமான் த்ரியேகரே
என்னை நடத்துகிறவர் நீரே
என்னை உயர்த்துபவரும் நீரே
உம்முடைய பேரன்பினால்
என்னை வழி நடத்துகிறவர் நீரே – அல்லேலூயா (2)

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo