EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics
என் விசுவாச கப்பல் சேதமாகாமல்
இதுவரை காத்துக் கொண்டீரே
என்னை வழி நடத்துகிறீர்…(2)
என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்
நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரே
என் தெய்வம் என்னோடு
இல்லையென்றால்
மூழ்கி நான் போயிருப்பேன்…
உம்சமூகம் என்னோடு
இல்லையென்றால்
திசைமாறி போயிருப்பேன்..
நீர்போதுமே என் வாழ்விலே
நீர்வேண்டுமே என் வாழ்விலே
நீரே நிரந்தரமே – ஐயா (2)
1.உலகமென்னும் சமூத்திரத்தில்
என் பயணம் தொடருதைய்யா
பெருங்காற்றோ புயல் மழையோ
அடிக்கையிலே இதுவரை சேதமில்லை
என் தெய்வம் என்னோடு
இல்லையென்றால்
மூழ்கி நான் போயிருப்பேன்…
உம்சமூகம் என்னோடு
இல்லையென்றால்
திசைமாறி போயிருப்பேன் – நீர் போதுமே
2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லை
தீங்கு செய்ய ஒருவருமே என்மேலே கை போடவில்லை
உம் கிருபை என்னோடு இல்லையென்றால் நிர்மூலமாயிருப்பேன்
உம் வசனம் என்னை தேற்றாதிருந்தால் என்
துக்கத்திலே மூழ்கியிருப்பேன்.. – நீர் போதுமே
3.வெள்ளம் போல சாத்தானும்
என் எதிரே வந்தபோது
ஆவியான என் தெய்வம்
அவன் எதிரே கொடியை ஏற்றினீரே
தடையாவும் முற்றிலும் நீக்கினிரே
பாதைக்கு வெளிச்சம் நீரே
ஜெயம் கொடுத்து இதுவரை நடத்தினீரே
உம் கிருபை போதுமையா. – நீர் போதுமே
EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics