EN YESUVAE Enakkai – என் இயேசுவே எனக்காய் Song Lyrics
என் இயேசுவே எனக்காய் மரித்தீரே
என் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரே
நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை நினைத்தீர் இயேசுவே
உம்மை விட்டு பிரிந்தாலும்
தேடி வந்தீர் இயேசுவே
ஜீவன் தந்தீர் இந்த பாவிக்காய்
பலியானீரே இந்த துரோகிக்காய்-2-என் இயேசுவே
தகப்பனே உம்மை தள்ளினேன்
என் விருப்பம் போல ஓடினேன்
காத்துக்கிடந்தீர் வாசலில்
நான் (மீண்டும்) வருவேன் என்ற ஏக்கத்தில்-2
எல்லாம் இழந்து நிற்கையில்
யாரும் இல்லை அருகினில்
தூரத்தில் என்னை கண்டதும்
ஓடி வந்து அணைத்தீரே
உந்தன் அன்பை நான் என்றும் என்றும் மறவேனே என் இயேசுவே
உயிர்வாழும் நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்திடுவேன்-2 – என் இயேசுவே