Engal Ratchaniya Moorthi – எங்கள் இரட்சணிய மூர்த்தி

Deal Score0
Deal Score0

பல்லவி

எங்கள் இரட்சணிய மூர்த்தி
எல்லாருக்கும் இரட்சகர்

சரணங்கள்

1. மாசில்லாத மெய்த் தேவன்
மானிட ரூபமானார்
இரட்சண்ய மூர்த்தி என்ற
இனிய நாமமுடையார்! – எங்கள்

2. வம்பு நிறைந்த இந்த
மானிட ஜாதிகள் மேல்,
அன்பு நிறைந்த பகவான்
அதிக உருக்கமுள்ளார்! – எங்கள்

3. பாவத்தில் கோபம் வைப்பார்
பாவிமேல் கோபம் வையார்
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலமாக நிற்பார்! – எங்கள்

4. அந்தர வானத்திலும்,
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே இரட்சகர் – எங்கள்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo